புகார் பெட்டி : சாலையோரம் குப்பை எரிப்பு
சாலையோரம் குப்பை எரிப்புதிருத்தணி -- மத்துார் செல்லும் ஒன்றிய சாலையில், தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம், சாலையோரம் குப்பை கொட்டி தீயிட்டு எரிக்கின்றன.சாலையோரம் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளன. எனவே, ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பை கொட்டுவது மற்றும் எரிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.- -க.பாண்டு, மத்துார்.