உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / சேதமடைந்த மின்கம்பம் மாணவர்கள், மக்கள் அச்சம்

சேதமடைந்த மின்கம்பம் மாணவர்கள், மக்கள் அச்சம்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பாரதிதாசன் தெருவில், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், நகராட்சி தொடக்க பள்ளி அருகே உள்ள மின்கம்பம் சிமென்ட் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பி வெளியில் தெரிகிறது. சேதமடைந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்களும், பள்ளி மாணவ - மாணவியரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும். - ச.வி.ஆதித் விசாகன், வள்ளுவர்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை