உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர் : புகார் பெட்டி;எலும்புக்கூடான மின்கம்பம் உடைந்து விழும் அபாயம்

திருவள்ளூர் : புகார் பெட்டி;எலும்புக்கூடான மின்கம்பம் உடைந்து விழும் அபாயம்

எலும்புக்கூடான மின்கம்பம் உடைந்து விழும் அபாயம்

தி ருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி அம்பேத்கர் நகரில், அங்கன்வாடி மையம் எதிரே குடியிருப்புகள் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. எலும்புக்கூடாக காட்சியளிக்கும் இந்த மின்கம்பத்தால் பகுதிமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்த மின்கம்பம் சாதாரணமாக காற்று வீசினாலே உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆ.மணிராஜ், சின்னம்மாபேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை