வாகன ஓட்டிகளுக்கு அபாயம்!
வீணாகும் குடிநீர் திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் தேங்கி நின்று வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும். - துரைராஜ், பாரப்பாளையம். குப்பை வாகனம் வருவதில்லை திருப்பூர், கருவம்பாளையம், அமர்ஜோதி கார்டனில் குப்பை எடுக்க கடந்த, ஒரு மாதமாக குப்பை வாகனம் வருவதில்லை. அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கையில்லை. - ராதா, அமர்ஜோதி கார்டன். விபத்து அபாயம் திருப்பூர், சிறுபூலுவபட்டியில் வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயமும் உள்ளது. - கார்த்தி, சிறுபூலுவபட்டி. கடும் துர்நாற்றம் திருப்பூர், அவிநாசி ரோடு ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. - கதிர்வேல், திருப்பூர்.