உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி உறக்கம்

கழிவுநீர் தேக்கம்; சுகாதாரப்பணி உறக்கம்

சுகாதார சீர்கேடுகணக்கம்பாளையம் - பொங்குபாளையம் வழி ஆர்.எஸ்., புரம் பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- நாகராஜ், பொங்குபாளையம் (படம் உண்டு)சாலை சேதம்காங்கயம் ரோடு, டி.எஸ்.கே., மருத்துவமனை எதிரே கதிர் நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.- கண்ணன், கதிர் நகர். (படம் உண்டு)ஒளிராத விளக்குதிருப்பூர், பி.என்., ரோடு, மூம்மூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- கிருபானந்தன், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)கழிவுநீரால் அவதிதிருப்பூர், முதல் வார்டு, இந்திரா நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- விக்னேஸ்வரன், இந்திரா நகர். (படம் உண்டு)திருப்பூர், நெருப்பெரிச்சல் சாலையில் பாதி வரை மண் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். மண்ணை அகற்ற வேண்டும்.- விஜி, நெருப்பெரிச்சல். (படம் உண்டு)இதுவா சீரமைப்பு?கருவம்பாளையம், மாகாளியம்மன் கோவில், நாதன் மாவு மில் விரிவு அருகே சாலை சரிந்து விடாமல் இருக்க, கற்கள் வைத்து அடுக்கப்பட்டுள்ளது. கற்களை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும்.- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், 39வது வார்டு, ஜெய் நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- ராஜா, ஜெய் நகர். (படம் உண்டு)கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் வழியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு) திருப்பூர், 55வது வார்டு, தெய்வானையம்மாள் லே-அவுட் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)ரியாக் ஷன்சுத்தமானது கால்வாய்திருமுருகன்பூண்டி முதல் வார்டு, நெசவாளர் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.- மனோகர், நெசவாளர ்காலனி. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை