காற்றில் அசைந்தாடும் கண்காணிப்பு கேமரா
எரியாத விளக்குதிருப்பூர், அங்கேரிபாளையம் மெயின் ரோடு, கமிஷனர் அலுவலகம் முன் டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதி வரை தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- லோகநாதன், டீச்சர்ஸ்காலனி (படம் உண்டு)உடைந்த கேமராவீரபாண்டி பிரிவு சிக்னல் நால்ரோடு சந்திப்பில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் உடைந்து காற்றின் வேகத்துக்கு ஆடுகின்றன.- செல்வராஜ், வீரபாண்டி பிரிவு. (படம் உண்டு)சீரற்ற சாலைகரைப்புதுார் ஊராட்சி, மீனம்பாறையில் இணைப்பு சாலை உயரமாக உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது தடுமாற வேண்டியுள்ளது.- செல்வம், மீனம்பாறை. (படம் உண்டு)புதுராமகிருஷ்ணாபுரம் - கட்டபொம்மன் நகர் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொண்டு, சாலை சீரமைக்க வேண்டும்.- கோவிந்தசாமி, கட்டபொம்மன் நகர். (படம் உண்டு)அள்ளப்படாத குப்பைஅல்லாளபுரம், வேங்கடேச நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். ரோட்டில் குவியும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- ராஜ், அல்லாளபுரம். (படம் உண்டு)ஆபத்தான கம்பம்அனுப்பர்பாளையம் புதுார் பஸ் ஸ்டாப் அருகே சிமென்ட் பூச்சு விழுந்து கம்பி தெரியும் நிலையில் ஆபத்தாக மின்கம்பம் உள்ளது.- செல்வராஜ், அனுப்பர்பாளையம்புதுார். (படம் உண்டு)தேங்கிய மழைநீர்காலேஜ் ரோடு அணைப்பாளையத்தில் ரயில்வே பாலத்தின் கீழ் வழிந்தோடி வழியின்றி மழைநீர் தேங்கி நிற்பதால், வாகனஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது.- செல்வராஜ், அணைப்பாளையம். (படம் உண்டு)வெளியேறாத கழிவுநீர்திருப்பூர், 51வது வார்டு, ஆர்.வி.இ., லே- அவுட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.- ஜீவா, ஆர்.வி.இ.,லே-அவுட். (படம் உண்டு)அடைபட்ட கால்வாய்கருமாரம்பாளையம், நடுநிலைப்பள்ளி எதிரில், ரேஷன் கடை முன்புறம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.- சங்கர், கருமாரம்பாளையம். (படம் உண்டு)ரியாக் ஷன்குழி மூடல்திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் கால்வாய் பணி மந்தமாக நடக்கிறது. பணி முடிந்து குழி மூடப்படவில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் மண் கொட்டப்பட்டுள்ளது.-- சர்தார் பாட்ஷா, திலகர் நகர். (படம் உண்டு)