உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / விழுப்புரம் / புகார் பெட்டி விழுப்புரம்

புகார் பெட்டி விழுப்புரம்

குண்டும், குழியுமான சாலை விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மாணவிகள் உள்ளிட்டோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். - சுமதி, விழுப்புரம். போதை ஆசாமிகள் ரகளை மாம்பழபட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிபிரியர்கள் போதையில் ரகளை செய்வதால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர். - சிங்காரவேலன், மாம்பழப்பட்டு. காட்சி பொருளான குடிநீர் குழாய்கள் விழுப்புரம் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள பல குடிநீர் குழாய்களில், தண்ணீர் வராததால், பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். - சுரேந்தர், விழுப்புரம். தெரு நாய் தொல்லையால் அச்சம் விழுப்புரம், அரசு ஊழியர் குடியிருப்பில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் சிறுவர்கள் உள்ளிட்டோர் அச்சப்படுகின்றனர். - சிவராமன், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !