உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

எரியாத தெரு விளக்குகள் விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பில் இரவில் தெருவிளக்குகள் சரியாக எரியாததால் மர்ம நபர்களின் நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைகின்றனர். -சுகந்தி, விழுப்புரம் சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகள் விழுப்புரம் எம்.ஜி., ரோடு அருகேவுள்ள சிக்னலை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலையுள்ளது. -பற்குணம், விழுப்புரம் நாய் தொல்லையால் அச்சம் திண்டிவனம், மாரியம்மன் கோவில் வீதி, வாணிய பிள்ளையார் கோவில் வீதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் அவ்வழியே செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். - சுரேஷ் பாலாஜி, திண்டிவனம் குண்டும், குழியுமான சாலை விழுப்புரம் மகராஜபுரம் மகாதேவன் நகருக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். - சிங்காரவேலன், விழுப்புரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை