மேலும் செய்திகள்
வீடு புகுந்து அண்டா, குண்டா திருடிய கும்பல் கைது
13-Aug-2024
கண்ணகி நகர், பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல் மற்றும் வளரின பருவ பெண்களுக்கு மனநலம், உடல்நிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கம், கண்ணகி நகரில் உள்ள, முதல் தலைமுறை கற்றல் மையத்தில், நேற்று நடந்தது.இதில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேசியதாவது:மாணவ - மாணவியர் உயர்ந்த குறிக்கோளுடன் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும். அதற்கான வசதிகள் கொட்டி கிடக்கின்றன.இளைஞர்கள், தீய பழக்கத்திற்கு ஆளாகாமல் வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள வேண்டும். இளம் வயது திருமணங்களால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்பை உணருவது அவசியம்.இளைஞர்கள் தங்கள் படிப்பு, ஆரோக்கியம், பாதுகாப்புக்கு மட்டுமில்லாமல் தங்களை சுற்றி உள்ளவர்கள் மீதும் அதே கவனத்தை செலுத்தி, வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பெண்களின் உடல்நலன், மனநலன் ஆரோக்கியம் தொடர்பாக, மருத்துவர்கள் ஜெயராணி, பிரேமலதா உள்ளிட்டோர், தன்னம்பிக்கை உரை ஆற்றினர்.
13-Aug-2024