உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சபதம் போட்டு சாதித்து காட்டிய அமைச்சர்!

சபதம் போட்டு சாதித்து காட்டிய அமைச்சர்!

''கை பணத்தை போட்டு கணக்கை சரி பண்ணுதாங்கல்லா...'' என்றபடியே, கருப்பட்டி காபியை உறிஞ்சினார் பெரியசாமி அண்ணாச்சி.''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''திருப்பூர் மண்டல அறநிலைய துறையில் ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி குடுக்க பெரிய அளவுல, 'கவனிப்பு' எதிர்பார்க்கிறாங்க... பிரபலமான கோவில்களா இருந்தாலும், 'கவனிப்பு' இருந்தால் தான், திருப்பணிக்கு அனுமதியே தர்றாங்க வே...''கோவில் உண்டியல் திறக்க, இவங்களிடம் முன் அனுமதி வாங்கி, தேதியும் வாங்கணும்... ஆனா, தேதி தராம இழுத்தடிக்காங்க வே... எந்த கோவிலுக்கு போனாலும், நுழைவு கட்டண கவுன்டரில், 20 ரூபாய் நோட்டுகளை நிறைய வாங்கி, உண்டியல்ல காணிக்கை போட்டு மனமுருக சாமி கும்பிடுதாங்க... ''ஆனா, வாங்கிய பணத்தை குடுக்காம போயிடுறதால, கவுன்டர்ல இருக்கிற ஊழியர்கள் தங்களது கைப்பணத்தை போட்டு கணக்கை முடிக்க வேண்டியிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''ஓட்டு வித்தியாசம் குறைஞ்சுட்டதால, அமைச்சர், 'அப்செட்' ஆகிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த அமைச்சரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழகத்துலயே ரொம்பவும் கம்மியா 4,379 ஓட்டுகள் வித்தியாசத்துல தான், விருதுநகர் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஜெயிச்சிருக்கார்... வருவாய் துறை அமைச்சரான சாத்துார் ராமச்சந்திரன் தொகுதியான அருப்புக்கோட்டையில், தே.மு.தி.க., விஜய பிரபாகரன், 12,278 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் வாங்கிட்டார் ஓய்...''இதுதான், மாணிக்கம் ஓட்டு வித்தியாசம் குறைவுக்கு காரணம்னு காங்கிரசார் புலம்பறா... இதனாலயே, நள்ளிரவு 1:00 மணிக்கு வெற்றி சான்றிதழ் வாங்க மாணிக்கத்துடன் வந்த அமைச்சர் முகத்துல சிரிப்பே இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.''என்கிட்டயும் ஒரு அமைச்சர் கதை இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''மதுரையை சேர்ந்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்திக்கு, மதுரை, தேனின்னு ரெண்டு லோக்சபா தொகுதி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்கிற பொறுப்பு இருந்துச்சு... ஏன்னா, 'தேனியில் போட்டியிட்ட அ.ம.மு.க., தினகரன், அமைச்சர் மூர்த்தியின் சம்பந்தி வழியில் உறவினர்... அதனால, தினகரனுக்கு ஆதரவா அமைச்சர் இருக்கார்'னு தலைமைக்கு சிலர் கொளுத்தி போட்டுட்டாங்க...''இதனால டென்ஷனான மூர்த்தி, 'தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் ஜெயிக்கலைன்னா, என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்றேன்'னு பகிரங்கமாவே சபதம் போட்டிருந்தாருங்க...''மதுரையில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஜெயிக்க வைக்கிற பொறுப்பும் மூர்த்தியிடம் இருந்துச்சு... இதனால, தேர்தல் பணிகள்ல பம்பரமா சுத்தி வந்தாருங்க...''ஆனாலும், ஓட்டு எண்ணிக்கை நடந்தப்ப அமைச்சர் பதற்றத்துல தான் இருந்தாரு... மூர்த்தி பொறுப்பு வகித்த மதுரைக்கு உட்பட்ட மேலுார், மதுரை கிழக்கு சட்டசபை தொகுதிகள், தேனிக்கு உட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகள்ல, கடந்த தேர்தல்ல கிடைச்ச ஓட்டுகளை விட, இந்த முறை அதிகமா கிடைச்சிருக்கிற தகவலை கேள்விப்பட்டு தான் நிம்மதி ஆகியிருக்காருங்க...''அதே நேரம், மதுரை, தேனியில் வெற்றிக்கனியை பறிச்சு குடுத்துட்டதால, மூர்த்திக்கு தலைமையிடமும் நல்ல பெயர் கிடைச்சிருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ