பைக் -- கார் மோதல் 10 வயது சிறுமி பரிதாப பலி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை, பாலன் நகரை சேர்ந்தவர் கருப்பையா, 46. இவரது மகள் கல்பனா, 10. மகன் பாலமுருகன், 12. மூவரும், 'பேஷன் ப்ரோ' பைக்கில், நேற்று மதியம், பாலன் நகரிலிருந்து பெருங்களூரு சென்றனர். அப்போது, முள்ளுர் பகுதியில் சாலையை கடந்த போது, எதிரே வந்த கார் மோதி, கல்பனா உட்பட பைக்கில் சென்ற மூவரும் படுகாயமடைந்தனர் . புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியில் கல்பனா உயிரிழந்தார். தந்தை, மகன் சிகிச்சை பெறுகின்றனர். கணேஷ்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.