உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / முற்றுகை போராட்டம் 100 பேர் கைது

முற்றுகை போராட்டம் 100 பேர் கைது

சென்னை, வக்ப் வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பு அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நுாற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி, ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.'மத்திய அரசை கண்டித்து முதல் கட்டமாக இந்த போராட்டத்தை துவங்கி இருக்கிறோம். வக்ப் வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் வரையில், எங்கள் போராட்டம் தொடரும்' என, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அக்ரம் கான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை