உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு 1,008 மஹா சங்காபிஷேக உற்சவம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு 1,008 மஹா சங்காபிஷேக உற்சவம்

திருக்கழுக்குன்றம்,திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு, 1,008 மஹா சங்காபிஷேக உற்சவம் நடந்தது.திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோவிலில், கார்த்திகை மாத இறுதி சோமவார திங்கட்கிழமையில், வேதகிரீஸ்வரருக்கு, 1,008 மஹா சங்காபிஷேக உற்சவம் நடைபெறும். இந்நாளான நேற்றும், மஹா சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.காலை, சங்குகளில் மலர்கள் வைத்து அலங்கரித்து, யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. நண்பகல் பூர்ணாஹுதி தீபாராதனை முடித்து, 12:30 மணிக்கு வேதகிரீஸ்வரருக்கு சங்காபிஷேகம் துவக்கி, 2:30 மணி வரை, 1,008 சங்குகளில் நிரப்பிய புனித நீரில் அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்ட சுவாமிக்கு, சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.l இதேபோல், திருப்போரூர் பிரணவ மலையில் அமைந்துள்ள பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.மாலை 5:30 மணிக்கு சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், நெய் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை