பொது ஏரியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி
மறைமலைநகர்,செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் நிரஞ்சன், 9. செங்கல்பட்டில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.கோடை விடுமுறை என்பதால், நேற்று காலை 10:00 மணியளவில் வெளியில் விளையாடச் சென்றவர், 12:00 மணி வரை வீடு திரும்பவில்லை.அச்சமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினருடன் பல்வேறு இடங்களில் தேடினர்.அம்மணம்பாக்கம் ஏரியில் நிரஞ்சனின் பேன்ட் மற்றும் மீன் பிடிக்கும் துாண்டில் இருந்ததைக் கண்ட கிராமத்தினர், ஏரியில் இறங்கி தேடினர்.அப்போது, தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் கிடந்த நிரஞ்சனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நிரஞ்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.