மேலும் செய்திகள்
முதியவருக்கு கத்தி குத்து போலீசார் விசாரணை
22-Nov-2024
அம்பத்துார், அம்பத்துார், மங்களபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது இரண்டாவது மகள் நிவேதா 24, கடந்தாண்டு அதே பகுதியைச் சேர்ந்த சேனிஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.சேனிஷ்குமார் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால், கடந்த 28ம் தேதி, கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நிவேதாவை சமாதானம் செய்வதற்காக, சேனிஷ்குமார் நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு தகராறு ஏற்படவே, சேனிஷ்குமார்,நிவேதாவின் வயிற்றில் ஓங்கி மிதித்துள்ளார். தடுக்க வந்த நிவேதாவின் சதோதரியை, மறைத்து வைத்திருந்த கத்தியின் கைபிடி பகுதியால் தாக்கி விட்டு தப்பியுள்ளார்.அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சேனிஷ்குமாரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
22-Nov-2024