உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  தி.மு.க.,வில் இருந்து வந்து ஆட்டம் போடும் த.வெ.க., நிர்வாகி!

 தி.மு.க.,வில் இருந்து வந்து ஆட்டம் போடும் த.வெ.க., நிர்வாகி!

“ஆலோசகரை வீட்டுக்கு அனுப்பிட்டாவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “எந்தத் துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய். “சி.எம்.டி.ஏ., சார்புல, சென்னையில அடுத்த, 20 வருஷத்துக்கான வளர்ச்சிப் பணிகளை திட்டமிட, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க முடிவு செஞ்சாவ... இதுக்காக, வெளியில இருந்து ஆலோசகர் ஒருத்தரை நியமிச்சாவ வே... “அந்த ஆலோசகருக்கு, சென்னையைப் பத்தி எதுவும் தெரியலைன்னு ஏற்கனவே நாம பேசியிருக்கோம்... அவருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலரை விட அதிக சம்பளம் குடுத்த விவகாரம், ஆளுங்கட்சி மேலிடத்துக்கு போயிருக்கு... இப்ப, அவருக்கான ஒப்பந்தத்தை முடிச்சு, வீட்டுக்கு அனுப்பிட்டாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “ஜெயபால் தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வை கண்டுக்கவே இல்லைங்க...” என்றபடியே தொடர்ந்தார்... “பெரம்பலுார் மாவட்டம், குரும்பலுார் அரசு கலைக் கல்லுாரியில், சமீபத்துல பட்டமளிப்பு விழா நடந்துச்சு... இந்தக் கல்லுாரி, பெரம்பலுார் சட்டசபை தொகுதிக்குள்ள இருக்குதுங்க... அதனால, தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சிவகுமாரை சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்கணும்... ஆனா, அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கலைங்க... “அதேநேரம், இதே கல்லுாரியில பி.எஸ்சி., படிச்சு பட்டம் வாங்கிய தன் மகளை அழைச்சிட்டு போக, எம்.எல்.ஏ., வந்திருக்காரு... அவரைப் பார்த்ததும், மாணவர்கள் சிலர் அவருடன் போட்டோ எடுத்துக்கிட்டாங்க... “எம்.எல்.ஏ., வந்திருக்கிறது தெரிஞ்சும் கூட, கல்லுாரியின் பொறுப்பு முதல்வரான கீதப்பிரியா, அவரைப் போய் பார்க்கவே இல்லை... ஆனாலும், எம்.எல்.ஏ., இதை பிரச்னையாக்க விரும்பாம, தன் மகளை அழைச்சிட்டு போயிட்டாருங்க...” என்றார் அந்தோணிசாமி. “தி.மு.க.,வில் இருந்து வந்து, ஆட்டம் போட் டுண்டு இருக்கார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “சென்னை, விருகம்பாக்கம் பகுதி த.வெ.க., நிர்வாகி, தேர்தலுக்கு முன்னாடி தி.மு.க.,வில் இருந்து இந்தக் கட்சிக்கு வந்தார்... தேர்தல் நேரத்துல, தி.மு.க., பகுதி நிர்வாகியிடம், 20 லட்சம் ரூபாயை வாங்கிண்டு, தேர்தல் வேலை செய் யாம பதுங்கிட்டார் ஓய்... “தேர்தல்ல, விருகம்பாக்கம் தொகுதியில் த.வெ.க., மாவட்டச் செயலரான சபரிநாதன் ஜெயித்து, அரசு கொறடா பதவிக்கும் வந்துட்டதால, அவருடன் ஒட்டிண்டார்... கட்சிப் பதவிகளுக்கு பணம் வசூல் பண்றது, கந்துவட்டி கும்பலுடன் தொடர்புன்னு இஷ்டத்துக்கு புகுந்து விளையாடறார் ஓய்... “பொது நிகழ்ச்சிகள்ல பங்கேற்க, எம்.எல்.ஏ.,வை அனுமதிக்கறது இல்லை... எம்.எல்.ஏ.,வுக்கு யார் போன் போட்டாலும், இவரே எடுத்து, 'எம்.எல்.ஏ., இல்லை'ன்னு, சொல்லி வச்சுடறார் ஓய்... “சமீபத்துல, அ.ம.மு.க., வட்ட நிர்வாகி ஒருத்தரிடம், 'சென்னை மாநகராட்சித் தேர்தல்ல, 138வது வார்டுக்கு நீதான் கவுன்சிலர்'னு சொல்லி, 20 லட்சம் ரூபாயை வாங்கியிருக்கார்... 'இவரது அடாவடியால, மாநக ராட்சித் தேர்தல்ல இந்தப் பகுதியில கட்சியின் வெற்றி பாதிக்கும்'னு, த.வெ.க., தொண்டர்கள் புலம்பறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா. “பெரியசாமி அண்ணாச்சி, வாங்க கிளம்பலாம்...” என, வழக்கத்துக்கு மாறாக பெயர் சொல்லி அழைத்தபடியே அந்தோணிசாமி எழ, ஏதோ புரிந்தது போல மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Subramanian Sundararaman
ஆக 07, 2026 06:49

It is nice to be important . It is even more important to be nice


D.Ambujavalli
ஆக 06, 2026 19:23

நல்லவேளை அந்த. சுற்றறிக்கை. விவரமும், பழைய நிகழ்வும். இவருக்குத். தெரியவில்லை கல்லூரி முதல்வர். பிழைத்தார்


D.Ambujavalli
ஆக 06, 2026 19:21

நல்ல. வேளை அந்த. சுற்றறிக்கை. விவரமும், பழைய. நிகழ்வும். தெரியாததால். கல்லூரி. முதல்வர். தப்பித்தார். 1


Saravana Kumar
ஆக 06, 2026 06:50

கல்லூரி விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைப்பது கட்டாயமா ? முதல் முறையாக கேள்விப்படுகின்றேன்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 06, 2026 08:07

கட்டாயமா என்பது தெரியவில்லை. ஆனால் மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்றும் அழைப்பிதழ்களில் அவர்களது பெயர் இடம் பெறவேண்டும் என்றும் அரசு சுற்றறிக்கை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை பல்கலை விழாவில் எம் எல் ஏ மலைராஜாவை அழைக்காததற்கும் அழைப்பிதழில் அவர் பெயரை போடாததற்கும் பல்கலை துணைவேந்தர் எம் எல் ஏ இடமிருந்து பளார் வாங்கினார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை