உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பொது ரூ.16.23 லட்சம் திருடிய பங்க் மேலாளர் சிக்கினார்

பொது ரூ.16.23 லட்சம் திருடிய பங்க் மேலாளர் சிக்கினார்

புளியந்தோப்பு, பட்டாளம், டிமலஸ் சாலையில், ஆட்டோ எல்.பி.ஜி., 'பங்க்'கை மரிய ஜோஸ்பின் சரினா, 49, நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மேலாளராக, சதிஷ்குமார், 32, என்பவர் பணியாற்றினார்.கடந்தாண்டு இறுதியில், சபரிமலை செல்வதாக கூறி சென்றவர், வசூல் பணத்தை நிறுவன லாக்கரில் வைத்து சாவியை எடுத்துச் சென்றுள்ளார். சபரிமலையில் இருந்து வந்ததும், வங்கி கணக்கில் சேர்த்து விடுவதாக தெரிவித்துள்ளார்.ஆனால், அவர் வேலைக்கு திரும்பாமல் தலைமறைவானார். சந்தேகமடைந்த மரிய ஜோஸ்பின், மாற்று சாவி வைத்து லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் பணம் ஏதுமில்லை. கணக்குகளை சரிபார்த்தபோது, நிறுவன பணம் 16.23 லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் மரிய ஜோஸ்பின் சரினா புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை, போலீசார் நேற்று முன்தினம் திருப்பூரில் வைத்து கைது செய்தனர்.விசாரணையில் கையாடல் செய்த பணத்துடன், திருப்பதி உள்ளிட்ட சில கோவில்களிலுக்கு சென்றதும், பின் திருப்பூர் சென்றவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் 850 ரூபாய் தினக்கூலி வேலைக்கு சேர்ந்ததும் தெரிய வந்தது.மேலும், 'பங்க்'கில் கையாடல் செய்த 16.23 லட்ச ரூபாயையும், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் 'ஆன்லைன்' டிரேடிங் செயலியில் முதலீடு செய்து, இழந்தது தெரியவந்தது.போலீசார் அவரிடமிருந்து, ஒரு பைக், இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ