உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  வேண்பாக்கம் சாலையின் நட்டநடுவே அமரும் மாடுகள்

 வேண்பாக்கம் சாலையின் நட்டநடுவே அமரும் மாடுகள்

செங்கல்பட்டு:மலையடி வேண்பாக்கத்தில், சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் நிலவுவதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு, வேதநாராயணபுரம் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும், பொதுமக்கள் ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர். இந்நிலையில், மலையடி வேண்பாக்கத்தில் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், மாடுகள் திரிவது அதிகரித்து உள்ளது. குறிப்பாக, மாடுகள் சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊராட்சி நிர்வாகங்கள் மெத்தனமாக உள்ளன. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி