உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலி விசா வழங்கியவர் கைது

போலி விசா வழங்கியவர் கைது

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி, 30. கடந்த 2023ம் ஆண்டு, வெளிநாட்டில் வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது, வாட்ஸாப்பில் வந்த விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய அபிஷேக் என்பவர், அஜர்பைஜான் நாட்டில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். பின், வேலை கிடைத்துவிட்டதாக, சென்னை விமான நிலையத்தில் போலி பணி ஆணை மற்றும் போலி விசாவை வழங்கி, 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார். பின், அவை போலி என்பது தெரிய வந்தது. இது குறித்து, சென்னை விமான நிலைய போலீசில், குருமூர்த்தி புகார் அளித்தார். குற்றவாளியை தேடி வந்த போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !