உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மின்சாரம் பாய்ந்து உழவு மாடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து உழவு மாடுகள் பலி

உத்திரமேரூர்: -சிறுமயிலுாரில் இரு உழவு மாடுகள் மின்சாரம் பாய்ந்து நேற்று உயிரிழந்தன. உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிறுமயிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். 68; இவர், 50க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று, காலை 10:00 மணிக்கு, வழக்கம் போல அருகில் உள்ள விளை நிலத்தில், மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.அப்போது, காலை 11:00 மணியளவில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த, இரு உழவு மாடுகளின் மீது மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அதில், மின்சாரம் பாய்ந்து இரு உழவு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறிந்த, உத்திரமேரூர் கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த உழவு மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இது குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ