| ADDED : ஜன 10, 2024 09:37 PM
ஜனவரி 11, 1973மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில், சரத் திராவிட் -- புஷ்பா தம்பதிக்கு மகனாக, 1973ல் இதே நாளில் பிறந்தவர் ராகுல் டிராவிட். தன், 12வது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். கர்நாடக கிரிக்கெட் அணியில் தேர்வாகி, 15, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் விளையாடினார். கர்நாடகாவின் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்த போது, இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானார்.குலியுடன் இணைந்து, 95, 100 ரன்களை குவித்தார். 1996,- 1997ல் 106 அரை சதங்களை விளாசினார். அடுத்த இரண்டாண்டுகளில், ஏழு போட்டிகளில், 752 ரன்களை குவித்தார்.அடுத்து நடந்த உலகக்கோப்பை போட்டியில், கென்யாவுக்கு எதிராக சச்சினுடன் இணைந்து, 237 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் ஆகவும் திறமையை வெளிப்படுத்திய இவர், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற ராகுல் டிராவிட், இன்று தன் வாழ்வில் அரை சதம் அடிக்கிறார்.