உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / விவசாயிகள் போர்வையில் ஏரி மண் கொள்ளை!

விவசாயிகள் போர்வையில் ஏரி மண் கொள்ளை!

''இதாவது கிடைச்சுதேன்னு சந்தோஷப்படுதாவ வே...'' என்றபடியே,பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனகேட்டார், அந்தோணிசாமி.''பா.ஜ.,வுல சீட் கிடைக்காத அதிருப்தியில்இருந்த நடிகை கவுதமி, பா.ஜ., சிறுபான்மையினர்பிரிவுல மாநில நிர்வாகியாஇருந்த பாத்திமா அலி ஆகியோரை, அந்த கட்சியில ஏற்கனவே இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், அ.தி.மு.க.,வுக்குஅழைச்சிட்டு வந்தாரு... ''வர்றப்பவே, இவங்களுக்கு கவுரவமானபதவி தரப்படும்னு சொல்லியிருந்தாவ... அதுலயும் கவுதமி, கொள்கை பரப்பு செயலர்பதவியை எதிர்பார்த்து வந்தாங்க வே...''அவங்களுக்கு ஆறுதல் பரிசா, கொள்கைபரப்பு துணை செயலர் பதவி தந்திருக்காவ... அதே மாதிரி, மாநில மகளிர் அணி செயலர் பதவியை எதிர்பார்த்த பாத்திமா அலிக்கு சிறுபான்மையினர் பிரிவு துணை செயலர் பதவி குடுத்திருக்காவ... இதை ஆறுதல் பரிசா நினைக்கிற ரெண்டு பேரும், கட்சி பணிகள்ல தீவிரமா ஈடுபட இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பெண் அதிகாரி மேல புகார்கள் குவியுது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் அதிகாரியாஇருக்கிற பெண்மணி, போன வருஷம் ஜூலையில் தான் இங்க வந்திருக்காங்க... இந்த வருஷம் பிப்ரவரியில, அவங்களை தர்மபுரிக்கு மாத்திட்டாங்க பா...''ஆனாலும், ஆளுங்கட்சியினர் சிபாரிசுல, மறுபடியும்பாப்பிரெட்டிப்பட்டிக்கேவந்துட்டாங்க... எந்த சான்றிதழா இருந்தாலும்,'கவனிப்பு' இல்லாம கையெழுத்து போட மாட்டாங்க பா...''கவனிக்கிறவங்களை,சாயந்தரம் 7:00 மணிக்குமேல அலுவலகம் வரவழைச்சு, கையெழுத்துபோட்டு குடுக்குறாங்க...தன்னை கவனிக்கிற கீழ்மட்ட அதிகாரிகள்,கிராம நிர்வாக அதிகாரிகளை வாங்க,போங்கன்னு மரியாதையாபேசுறாங்க பா...''ஆனா, நேர்மையா இருந்து, தன்னை கவனிக்காதவங்களை ஒருமையில பேசுறதும், திட்டுறதுமா இருக்காங்க...அதே மாதிரி, நேர்மையானகீழ்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமலேயேஜாதி சான்றிதழ், பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ்களை வாரி வழங்குறாங்க...இவங்களை பத்தி கலெக்டர் வரைக்கும் புகார் போயும், ஆளுங்கட்சி செல்வாக்கால நடவடிக்கை எடுக்காம இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''மண்ணை வித்து காசு பார்க்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி வருவாய் கோட்டத்துல விவசாய நிலங்களை மேம்படுத்த,ஏரியில் இருந்து வண்டல்மண்ணை விவசாயிகள்இலவசமா எடுத்துக்கலாம்னு, மாவட்ட நிர்வாகம் அனுமதி குடுத்திருக்கு... இதுக்கு, 'ஆன்லைன்'ல விவசாயிகள் விண்ணப்பிக்கணும் ஓய்...''இந்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள்ஆய்வு பண்ணி, மண்எடுக்க அனுமதி தருவா...ஒரு விவசாயி அதிகபட்சமா, 70 யூனிட் மண் தான் எடுக்க முடியும் ஓய்...''ஆனா, விவசாயிகள்பெயர்ல நிறைய பேர், ஆன்லைன்ல போலியா விண்ணப்பிச்சு, ஒவ்வொருஏரியிலும், நுாற்றுக்கணக்கான யூனிட் மண்ணைஅள்ளறா... இந்த மண்ணை, ரியல் எஸ்டேட் அதிபர்கள், புது வீடு கட்டறவா, செங்கல் சூளைகளுக்கு, 1 யூனிட் 2,000 - 3,000ரூபாய் வரை வித்து லட்சக்கணக்குல சம்பாதிக்கறா... இதுக்கு வருவாய்மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளும் ஒத்தாசையாஇருக்கா ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

siva
அக் 28, 2024 16:54

ஊழல் அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி மன்னராட்சியில் இதெல்லாம் சகயமப்பா, மக்கள் இப்போது எதனையும் பொருட்படுத்துவதில்லை-தினசரி நாட்களைக் கழிப்பதே பெரும்பாடு- தங்கள் ஆதங்கத்தைத் தேர்தலில் காட்டுவார்கள்.


Lion Drsekar
அக் 27, 2024 20:29

மனிதர்களின் போர்வையில் மனித நேயம், கலாச்சாரம், கலை, பண்பாடு, என மொத்தமாக நாடே காணாமல் போய்க்கொண்டு இருக்கிறதே ? வந்தே மாதரம்


veeramani
அக் 27, 2024 09:03

அருப்புக்கோட்டையில் சிட்டிஸினின் ஆதங்கம் ... எழுபத்திஏழுகளில் மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் முதன் முதலில் இரட்டையிலி சின்னத்தில் போட்டியிட்ட தொகுதி .ஒரு கல்லூரி மாணவரை எம் ஜி ஆர் அவர்களுக்கு வேலை பார்த்தது இன்றுவரை மனது முழுவதும் மகிழ்ச்சி . முன்னாள் ஆ தி மு க வில் கட்சியை வழக்க தென் தமிழ்நாட்டில் பாடுபட்ட கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், அவனியாபுரம் காளிமுத்து, பட்டுக்கோட்டை சோமசுந்தரம் , மதுரை தேங்காய்கடை பாண்டி, உசிலை மாயத்தேவர், சேடப்பட்டி முத்தையா ராம்நாடு மண்டபம் அன்வர் ராஜா போன்றவர்களின் ரத்தத்த்தால் வளர்ந்தது. இதனால்தான் புரட்சித்தலைவர் பேசும்போது ரத்தத்தின் ரத்தங்கள் என தொண்டர்களை அழைப்பார். பின்னர் எம் ஜி ஆர் தொடர்கள் கட்சியிலிருந்து ஆதிக்கப்பட்டனர். இன்றும் அதே நிலைமைதான். இன்று பணம் கொடுத்து செஅட் வாங்கவேண்டியுள்ளது . இதனால்தான் வாக்குவங்கி குறைந்து கொண்டே போகிறது . கிட்டத்தட்ட வெட்டப்பட்ட கை சின்ன கட்சி போல தா ர்ச்சமயம் கட்சியின் நிலை உள்ளது விகுவிரைவில் காங்கிரஸ் கட்சிக்கு இரத்த இளைமை வரக்கூடும். கட்சியின் வரலாறு தெரியாதவர்களுக்கு பதவி கொடுப்பது என்பது இன்னும் கட்சியை பலவீனமடையச்செய்யும். ஒரே ஒரு கேள்வி. ஆ தி மு கா வில் தமிழ் நன்கு அறிந்த பேச்சாளர் உள்ளாரா ????????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை