உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது சீரமைக்க பகுதி மக்கள் வலியுறுத்தல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது சீரமைக்க பகுதி மக்கள் வலியுறுத்தல்

திருவாலங்காடு, பொன்னாங்குளத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பொன்னாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, 2002 - - 03ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆழ்குழாய் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, பின் குழாய் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தற்போது, சேதமடைந்து காணப்படுகிறது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து, குழாய் மற்றும் வால்வு சேதமடைந்து, தண்ணீர் வீணாகிறது. எனவே, பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி