உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வீடுகளில் நீர்க்கசிவை தடுக்கும் முறைகள்!

வீடுகளில் நீர்க்கசிவை தடுக்கும் முறைகள்!

மழை பெய்யும் போது வீடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் நீர் கசிந்தாலும் உடனே அதை சரி செய்துவிட வேண்டும். இல்லை என்றால் கட்டுமானத்திற்கு ஆபத்தாக மாறி உறுதியை சீர்குலைத்து விடும். கூரையில் நீர்க்கசிவுமழை பெய்யும் போது கான்கிரீட் கூரையில் நீர் கசிவு ஏற்படலாம். கசிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் போடும் முன்பாக மணலைச் சல்லடை மூலமாக நன்றாக சலிக்க வேண்டும். அதற்கு பின்பு தான் அதை பயன்படுத்த வேண்டும். ஆற்று மணலில் கலந்திருக்கும் களி மண் கட்டிகளை அகற்ற தான் இப்படி சலிப்பார்கள். மணலில் கலந்த களிமண்ணை அகற்றாமல் கான்கிரீட் கலவையுடன் சேர்ந்து கட்டினால் பாதிப்பு ஏற்படும். களிமண்ணின் ஈரத்தன்மை கான்கிரீட் வழியாக சுவருக்குள் இறங்கும். பெரும்பாலும் கான்கிரீட் மேற்கூரை போட்ட பின் மொட்டை மாடியில் சுருக்கி என்று அழைக்கப்படும் செங்கல் பொடி ஓடுகளை பதிப்பது வழக்கம். இந்த ஓடுகள் நல்ல தரத்தில் இல்லை என்றால் தண்ணீர் கான்கிரீட் வழியாக உள்ளே சுவரில் இறங்கும். குழாய்களில் நீர்க்கசிவுமழையை தவிர்த்து குளியல் அறை சுவருக்குள் பதிக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களிலும் கசிவு இருக்கலாம். தரமில்லா செங்கலை பயன்படுத்தி கட்டிய கட்டுமானத்தில் நீர் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. செங்கல் பயன்படுத்தும் முன் தண்ணீரை கொண்டு நன்கு நனைத்து பின் கட்டுமானத்துக்கு பயன்படுத்த வேண்டும். தரமற்ற கல்லாக இருந்தால் தண்ணீரிலேயே செங்கல் கரையும் அல்லது எடை கொஞ்சம் அதிகரிக்கும். எனவே தரமான செங்கல் மிகவும் முக்கியம். செங்கல் தரமாக இல்லை என்றால் அறைகள் மட்டுமல்ல, மொட்டை மாடியில் இருந்து கசியும் நீரும் மேற்கூரையை பாதிக்கும். இந்த நீர்க்கசிவு கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகளை தாக்கும் போது கம்பிகள் துருப்பிடித்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும். குளியல் அறையில் நீர்க்கசிவை பிளம்பர் வைத்துச் சரி செய்யலாம். பிற இடங்களில் கசிந்தால் அதை உடைத்து மீண்டும் பூசுவதே நல்லது. ரசாயன பேஸ்ட் பூச்சு மாடி தரையில் சுருக்கி பதிக்கும் முன் நீர்த்தடுப்பு சிமென்ட் கலவையை பூச வேண்டும். கைப்பிடி சுவர், மேற்பூச்சு பூசும் முன் இதை பூச வேண்டும். நீர் கசிவை தடுக்க ரசாயன பேஸ்ட்டுகள் உள்ளன. அதை சுண்ணாம்பு பூசுவது போல் சுவரில் பூசலாம். இந்த பூச்சு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை இருக்கும். பலர் ஈரக்கசிவை எளிதாக சரி செய்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், சுவர்களில் ஏற்படும் நீர்க்கசிவைச் சரி செய்வது எளிதல்ல எனவே, வீடு கட்டும் போதே நீர்க்கசிவு வராத அளவுக்கு தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை