வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் 'என்று வாய் கிழிவதும், தேர்தலில் சீட், எம். எல் ஏ ஆனதும் அமைச்சர் பதவி, துணை முதல்வர் என்று வாரிஸைத் தூக்கிவிடும்போது, மகனுக்கு இதுகூட செய்யமாட்டாரா?
''வாரிசை வளர்த்து விடுறாருங்க...'' என்ற படியே நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வுல தானே பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''வாரிசுன்னாலே, தி.மு.க., தானா... நான் சொல்றது, அ.தி.மு.க., 'மாஜி' சபாநாயகரும், அவிநாசி - தனி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தனபாலை... இவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அரசியல்ல பெருசா ஆர்வம் காட்டாம இருந்தாருங்க...''அப்படிப்பட்டவரை, 2024 லோக்சபா தேர்தல்ல, நீலகிரி லோக்சபா தொகுதியில் தனபால் களமிறக்கி விட்டாரு... அதுல, அவர் தோற்று போயிட்டாருங்க...''இப்ப, லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு, மாநில இளைஞரணி துணை செயலர் பொறுப்பு வாங்கி குடுத்திருக்காருங்க... இதுக்காக, இவருக்கு வாழ்த்து தெரிவிச்சு, அவிநாசி தொகுதியில் தனபாலின் ஆதரவாளர்கள் பல இடங்கள்ல பிளக்ஸ் பேனர்கள் வச்சிருக்காங்க...''அடுத்த வருஷம் வர்ற சட்டசபை தேர்தல்ல, அவிநாசி தொகுதியில் தனபால் ஒதுங்கி, தன் மகனை களம் இறக்கவும் முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''விடுமுறை தினத்துல விழா நடத்தி, நோக அடிச்சுட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''விழுப்புரம் மாவட்டத்துல, வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கும், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் ஏழாம் பொருத்தம்கறது ஊரறிஞ்ச ரகசியம்... ''பொன்முடி ஆதரவாளரான செஞ்சி சிவா ஏற்பாட்டுல, இல்லோடு கிராமத்துல, முன்னாள் பள்ளி மாணவர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவை தைப்பூசம் அன்னைக்கு நடத்தினா ஓய்...''இந்த விழாவுல பொன்முடி, கல்வி அமைச்சர் மகேஷ், கலெக்டர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்,எம்.பி., வருவாய், கல்வி மற்றும் போலீஸ் துறை உயரதிகாரிகள் எல்லாம் கலந்துண்டா... விழா நல்லபடியாவே நடந்துது ஓய்...''ஆனாலும், அதுல கலந்துண்ட அதிகாரிகளும், ஊழியர்களும், 'தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை விட்டிருக்கா... குடும்பத்தோட கோவிலுக்கு போகலாம்னு பிளான் பண்ணி வச்சிருந்தோம்... இன்னைக்கு பார்த்து நிகழ்ச்சியை நடத்தி, நம்ம விடுமுறை பிளானை கெடுத்துட்டாளே'ன்னு புலம்பிட்டே போனா ஓய்...'' என்றார்,குப்பண்ணா.''தன்னை மதிக்கவே மாட்டேங்கிறாங்கன்னு வருத்தப்படுறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்ல ஜெயிச்ச தி.மு.க.,வின் சந்திரகுமார், சமீபத்துல எம்.எல்.ஏ.,வா பதவி ஏத்துக்கிட்டாரே... இதுல, முதல்வர்ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் கலந்துக்கிட்டாங்க பா...''இதுக்கு, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கவே இல்லை... அவரது கட்சியின் மாநிலத் தலைவரான செல்வப் பெருந்தகை தான் கலந்துக்கிட்டாரு பா...''இவர் தான் ஏற்கனவே சட்டசபை காங்., தலைவரா இருந்தாரு... மாநிலத் தலைவரான பிறகும், இன்னும் சட்டசபை தலைவர் போலவே நாட்டாமை பண்றாராம்... இதனால, ராஜேஷ்குமாரை சட்ட சபை அதிகாரிகள், ஊழியர்கள் மதிக்கமாட்டேங்கிறாங்க பா...''அதுவும் இல்லாம, 'என்னோட கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகள் கூட, எனக்கு மரியாதை தர மாட்டேங்கிறாங்க... பேருக்கு தான் சட்டசபை காங்., தலைவரா இருக்கேன்'னு ராஜேஷ்குமார் புலம்புறாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.
என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் 'என்று வாய் கிழிவதும், தேர்தலில் சீட், எம். எல் ஏ ஆனதும் அமைச்சர் பதவி, துணை முதல்வர் என்று வாரிஸைத் தூக்கிவிடும்போது, மகனுக்கு இதுகூட செய்யமாட்டாரா?