உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பிருந்தாவன் நகர் சாலை படுமோசம் நடக்க முடியாமல் மக்கள் அவதி

பிருந்தாவன் நகர் சாலை படுமோசம் நடக்க முடியாமல் மக்கள் அவதி

புட்லுார், புட்லுார் ரயில் நிலையம் செல்லும் பிருந்தாவன் நகர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் ஊராட்சியில் பிருந்தாவன் நகர் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, அவ்வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பெய்த மழையால், சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர், மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துடன் கடக்க வேண்டியுள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர், பள்ளத்தில் சிக்கி தடுமாறுகின்றனர். எனவே, திருவள்ளூர் ஒன்றிய அதிகாரிகள், சேதமடைந்த பிருந்தாவன் நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை