உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வி.ஏ.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

வி.ஏ.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

வி.ஏ.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகைஓசூர், டிச. 10-சூளகிரி அண்ணா நகரிலுள்ள ஒரு தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, சூளகிரி ஒன்றியம் நிர்வாகம், நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள இருந்தது. இதற்கு, ஒரு குடும்பத்தினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்தும், கால்வாய் அமைக்க வலியுறுத்தியும், அப்பகுதியினர் நேற்று சூளகிரி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வி.ஏ.ஓ., கோவிந்தம்மாள், பி.டி.ஓ., உமாசங்கர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சர்வே செய்து, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை