அமிர்த விஷ்வ வித்யாபீடத்தில் வருவாய் மாவட்ட நீச்சல் போட்டி
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில், 2025-26ம் கல்வியாண்டுக்கான மாவட்ட வருவாய் அளவிலான நீச்சல் போட்டி வரும், 12ம் தேதி எட்டிமடை அமிர்த விஷ்வ வித்யாபீடத்தில் நடக்கிறது. அதன்படி, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு காலை, 8:00 மணி முதல் போட்டிகள் நடக்கின்றன. விளையாட்டு போட்டிகள் தொய்வின்றி நடக்கும் விதமாக, நடுவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ள உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவறாது பணிவிடுப்பு செய்து, அவர்கள் நடுவர் பணி மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.