உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கான்கிரீட் தொட்டியில் தேங்கும் மழைநீரால் தொற்று அபாயம்

கான்கிரீட் தொட்டியில் தேங்கும் மழைநீரால் தொற்று அபாயம்

அமைந்தகரை, சென்னை குடிநீர் வாரியத்தால் பராமரிக்கப்படும் பழமையான பாதாள சாக்கடை இயந்திர நுழைவு வாயில்கள் சேதமடைந்து, பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், சிமென்ட் கான்கிரீட் வாயிலாக ராட்சத தொட்டிகள் வடிவில், இயந்திர நுழைவு வாயில் தயார் செய்யப்படுகிறது. இவற்றை, அந்தந்த பகுதிகளிலேயே சாலையோரங்களில் தயாரித்து காய வைக்கின்றனர்.கடந்த சில நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர், காய வைக்கப்படும் ராட்சத கான்கிரீட் தொட்டிகளில் தேங்குகிறது. ஒரே இடத்தில் பயன்படுத்தாமல் பல நாட்களாக இருக்கும் இந்த தொட்டிகளில் தேங்கும் நீரானது, கழிவுநீராக மாறி, கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருவில், இதுபோன்ற இரண்டு தொட்டிகள் உள்ளன. பயன்பாடில்லாத இந்த தொட்டிகளில், மழைநீர் தேங்கி, கழிவுநீர் போல் காட்சியளிக்கிறது. இதில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை குவிந்து, கடும் துர்நாற்றமும் வீசுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில், இதுபோன்ற சீர்கேடு நிலவுவதால், நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. அமைந்தகரை மட்டுமின்றி சென்னையில் பல்வேறு இடங்களிலும், இதே நிலை தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, கழிவுநீரை அகற்றி, தொட்டிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ