உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரூ.10 லட்சம் வழிப்பறி ஏழு பேர் பிடிபட்டனர்

ரூ.10 லட்சம் வழிப்பறி ஏழு பேர் பிடிபட்டனர்

திருவேற்காடு, கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 43; சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர். இவர், தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை, 100, 200 ரூபாய் என சில்லரையாக மாற்றுவதற்கு, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 25, ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 48, ஆகியோரை அணுகியுள்ளார். இதற்காக, தன் நண்பர்கள் இருவருடன் 'மாருதி ஸ்விப்ட்' வாடகை காரில், 10 லட்சம் ரூபாயுடன் கடந்த 7ம் தேதி அயனம்பாக்கத்திற்கு சென்றார். அப்போது, இரு பைக்குகளில் வந்த கும்பல் காரை மறித்து, கத்தி முனையில் 10 லட்சம் ரூபாயை பறித்து தப்பியது. திருவேற்காடு போலீசார் விசாரித்தனர். இதில், சில்லரை மாற்றி தருவதாக கூறிய மணிகண்டன், திருநாவுக்கரசு, அவர்களது நண்பர்களான புழல் பார்த்திபன், 23, திருவொற்றியூர் ராமசந்திரன், 33, சாமுவேல், 25, ஜீவானந்தம், 27, மற்றும் செங்குன்றம் சூர்யா, 23, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், ஏழு பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை