மேலும் செய்திகள்
இடமாறுதல் போட்டும் அசைய மறுக்கும் போலீசார்!
08-Nov-2026
டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, ‘‘வெட்டியா அணிவகுப்பு நடத்தியிருக்கா ஓய்...’’ என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ‘‘போலீஸ் தகவலா பா...’’ என கேட்டார் அன்வர்பாய். ‘‘ஆமா... சிவகங்கை மாவட்டத்தில் கொந்தகை, கீழடி, மாத்துார்னு பல கிராமங்கள்ல சமீபகாலமா நிறைய கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடக்கறது... குறிப்பா, கொலை வழக்குல சிக்கி ஜாமின்ல வந்தவங்க மீது தான் இப்படி தாக்குதல்கள் நடந்திருக்கு ஓய்... ‘‘இதனால, பொதுமக்களிடையே பதற்றத்தை தணிக்கற விதமா அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செஞ்சா... ஆனா, சம்பவங்கள் நடந்த கிராமங்கள்ல அணிவகுப்பு நடத்தாம, சிவகங்கை மற்றும் மானாமதுரையில பெயரளவுக்கு அணிவகுப்பை நடத்தி முடிச்சுட்டா... இதனால, கிராம மக்கள் எல்லாம் பீதியில இருக்கா ஓய்...’’ என்றார் குப்பண்ணா. ‘‘என்கிட்டயும் ஒரு போலீஸ் மேட்டர் இருக்குதுங்க...’’ என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ‘‘தமிழக போலீஸ்ல, 1985ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியான திரிபாதி, 2021ல் ஓய்வு பெற்றாருங்க... சமீபத்துல, சென்னை புழல் மற்றும் தேனி மாவட்ட சிறையில இருந்து கைதிகள் தப்பியோடினாங்களே... ‘‘இந்த சம்பவங்களை அடுத்து, தமிழக சிறைகளின் பாதுகாப்பு தொடர்பா ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும் குழுவின் தலைவரா திரிபாதியை நியமிச்சிருக்காங்க... அதேபோல, 1990ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியான விஸ்வநாதன், டி.ஜி.பி.,யாகி, 2024ல் ஓய்வு பெற்றாருங்க... ‘‘இவர், 2017 – 2020 வரை சென்னை போலீஸ் கமிஷனரா இருந்தாரு... அப்ப, ‘மூன்றாவது கண்’ என்ற திட்டத்தை தொடங்கி, தெருவுக்கு தெரு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, குற்றச் சம்பவங்களை குறைச்சாருங்க... ‘‘இப்ப, தமிழக போலீசில் சிறப்பு ஆலோசகர் என்ற பதவியை உருவாக்க முடிவு பண்ணியிருக்காங்க... இந்த பதவிக்கு திரிபாதியும், விஸ்வநாதனும் முயற்சி பண்றாங்க... இதுல, விஸ்வநாதனுக்கு அதிக வாய்ப்பிருக்கிறதா போலீஸ் வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க...’’ என்றார் அந்தோணிசாமி. ‘‘அவசர அவசரமா தடையில்லாச் சான்றிதழ் வழங்குதாவ வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி. ‘‘எந்த துறையிலங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி. ‘‘கடந்த தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடு கட்டுறதுக்காக கையகப்படுத்தி, அதில் தேவை இல்லாத நிலங்களை மீண்டும் பயனாளிகளிடம் ஒப்படைச்சாவ... அதேநேரம், வாரியம் தரப்புல அந்த நிலங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் குடுத்தா மட்டுமே அந்த நிலங்களை விற்கவோ, வீடு கட்டவோ முடியும்... ‘‘தடையில்லாச் சான்றிதழ் கேட்டு, 1.50 லட்சம் மனுக்களுக்கு மேல வாரியத்துல குவிஞ்சிட்டு... இவற்றை பரிசீலனை பண்ணி சான்றிதழ் வழங்க, தி.மு.க., ஆட்சியில, ரெண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிச்சாவ வே... ‘‘அவங்க பெருசா எதுவும் செய்யல... இப்ப ஆட்சி மாறிட்ட சூழல்ல, வாரியத்தின் முக்கிய அதிகாரிக்கு வேண்டியவங்க மனுக்களை மட்டும், அவசர அவசரமா பரிசீலனை பண்ணி, தடையில்லாச் சான்றிதழ்களை குடுத்துட்டு இருக்காவ வே... ‘‘முக்கிய அதிகாரியின் மனைவி, ஓசூர்ல மருத்துவமனை நடத்துதாங்க... அவங்க சென்னையில இருந்து ஓசூருக்கு அதிகாரியின் அரசு கார்ல தான் போறாங்க வே...’’ என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ‘‘பிரபாகரன், இப்படி உட்காருங்க பா...’’ என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
08-Nov-2026