உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சிறுமி பலாத்காரம் இருவருக்கு வலை

சிறுமி பலாத்காரம் இருவருக்கு வலை

மதுரா: உத்தர பிரதேசத்தில், 10 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் தேடுகின்றனர். உ.பி., மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 10 வயது தலித் சிறுமி தன் அக்காவுடன் நேற்று முன்தினம் கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த இருவர், 10 வயது சிறுமியை, வலுக்கட்டாயமாக துாக்கி பைக்கில் உட்கார வைத்து அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோவில் மண்டபத்தில், சிறுமியை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். தங்கையின் அலறல் கேட்டு ஓடிய அக்கா, மண்டபத்தில் தன் தங்களை நிர்வாணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கா வந்தவுடன் இருவரும் தப்பி ஓடினர். தகவல் அறிந்து கிராம மக்கள் திரண்டனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தேடு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !