உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்புஓசூர், டிச. 10-ஓசூர் முனீஸ்வர் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி ராமசுப்பிரமணியம். இவரது மனைவி ராஜேஸ்வரி, 42. இருவரும், அப்பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் கடைக்கு வந்த, 2 வாலிபர்கள், ராஜேஸ்வரியிடம் தகராறு செய்து சென்றனர். நேற்று முன்தினம் மாலை மீண்டும் கடைக்கு வந்து, சிகரெட் கேட்டு தகராறு செய்து, ராஜேஸ்வரி தாக்கி, அவரது கழுத்திலிருந்த தாலியை பறித்தனர். இதில் தாலியின் ஒரு பகுதி மட்டும் வாலிபர்கள் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு பைக்கில் தப்பினர். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை