உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கரூர் சின்னதாராபுரம் அருகே, மார்க்கெட்டிங் தொழிலாளியை கத்தியால் குத்திய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் நேரு நகரை சேர்ந்தவர் வடிவேல், 46; மார்க்கெட்டிங் தொழிலாளி. இவர், தென்னிலையை சேர்ந்த சூர்யா, 31; என்பவருடன் சேர்ந்து, சில ஆண்டுகளாக மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக வடிவேல், சூர்யாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். கடந்த, 10ல் சின்னதாராபுரம் அருகே உள்ள ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் அருகே, வடிவேலை சந்தித்த சூர்யா மீண்டும், மார்க்கெட்டிங் தொழிலை தொடர வேண்டும் என கேட்டார்.அதற்கு, வடிவேல் மறுத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த சூர்யா, வடிவேலுவின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த வடிவேல், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, வடிவேல் அளித்த புகாரின்படி, சின்னதாராபுரம் போலீசார், சூர்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை