தகவல் சுரங்கம்
உலக புற்றுநோய் தினம்உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் மாற்றத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் 2வது இடத்தில் புற்றுநோய் உள்ளது. உலகில் ஆண்டுக்கு 1 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது உடலில் உள்ள ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவி உடல் உறுப்புகளை பாதிக்கிறது. பல வகைகள் உள்ளன. புற்றுநோய் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பிப்.4ல் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தனித்துவத்தால் ஒன்றுபடுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.