தகவல் சுரங்கம் : சர்வதேச எழுத்தறிவு தினம்
தகவல் சுரங்கம்சர்வதேச எழுத்தறிவு தினம்ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேச, எழுத தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். உலகில் 76.5 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் செப்., 8ல் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.