உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : அதிக மக்கள்தொகை தீவு

தகவல் சுரங்கம் : அதிக மக்கள்தொகை தீவு

தகவல் சுரங்கம்அதிக மக்கள்தொகை தீவுஉலகிலுள்ள தீவுகளில், அதிக மக்கள்தொகை கொண்ட தீவு ஜாவா. இது இந்தோனேஷியாவில் உள்ளது. இதன் மக்கள்தொகை 15.64 கோடி. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதம் இத்தீவில் உள்ளது. இதன் வடக்கில் ஜவா கடல், தெற்கில் இந்திய பெருங்கடல் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தோனேஷியாவின் 8 இடங்களில் நான்கு ஜாவா தீவில் உள்ளது. இதன் பரப்பளவு 1.32 லட்சம் சதுர கி.மீ. அந்நாட்டின் நெல் உற்பத்தியில் இத்தீவு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 30க்கு மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி