தகவல் சுரங்கம் : தொற்றுநோய்க்கு முன்னெச்சரிக்கை
தகவல் சுரங்கம்தொற்றுநோய்க்கு முன்னெச்சரிக்கைசீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் உலகமே ஸ்தம்பித்தது. 70 லட்சம் பேர் பலியாகினர். குறிப்பாக மருத்துவ, சுகாதார கட்டமைப்புகள் சவாலைசந்தித்தன. இதற்கு முன் அதிக பயன்பாட்டில் இல்லாததால் கவச உடைகள், கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து எதிர்கால தொற்றுநோய்களை சமாளிக்க தயாராகுதல், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 27ல் தொற்றுநோய் தயார்நிலைக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.