தகவல் சுரங்கம் : பெரிய பாலைவனம்
தகவல் சுரங்கம்பெரிய பாலைவனம்பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சமீபத்தில் சஹாரா பாலைவனத்தில் மழை பெய்தது. வட ஆப்ரிக்காவில் உள்ள இது, உலகில் பெரிய வெப்பமான பாலைவனம். பரப்பளவு 92 லட்சம் சதுர கி.மீ. நீளம் 4800கி.மீ. அகலம் 1800 கி.மீ. 'சஹ்ரா' என்றால் அரபு மொழியில் பாலைவனம் என அர்த்தம். அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஆப்ரிக்காவின் மொத்த பரப்பளவில் 31 சதவீதம் இப்பாலைவனம் உள்ளது. 2800 வகை தாவரங்கள் வளர்கின்றன. இந்த பாலைவனத்தில் மணல் 30%, சரளைக்கற்கள் 70% உள்ளன.