தகவல் சுரங்கம் : ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம்
தகவல் சுரங்கம்ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம்உலக மக்களின் பலவித வாழ்க்கை முறை, கலாசாரம் பற்றிய கதைகளை அறிய 'ஆடியோ விஷுவல் காப்பகங்கள்' உதவுகின்றன. இதில் வீடியோ, ஆடியோ பதிவுகள், திரைப்படம், வானொலி, 'டிவி' நிகழ்ச்சிகள் பாதுகாக்கப்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக நம் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பணியில் இது ஈடுபடுகிறது. வளரும் நாடுகளில் இந்த காப்பகங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யுனெஸ்கோ சார்பில் அக்.27ல் ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.