தகவல் சுரங்கம் : உலக ரத்த தான தினம்
தகவல் சுரங்கம்உலக ரத்த தான தினம்ரத்த தானம் அளிப்பதால் விபத்து, ஆப்பரேஷன் உள்ளிட்ட சூழலில் பாதிக்கப்படுபவர் காப்பாற்றப்படுகின்றனர். ரத்த தான அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ரத்தம் வழங்கு, நம்பிக்கை கொடு: நாம் இணைந்து உயிர்களை காப்போம்' என்பது இந்தாண்டு மையகருத்து. 18 --65 வயதுடையவர்ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 45 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கலாம். 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது.