தகவல் சுரங்கம் : குகைக்குள் ரயில்
தகவல் சுரங்கம்குகைக்குள் ரயில்ஹிமாச்சல் தலைநகர் சிம்லா. இது சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 7467 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது சுற்றுலா இடங்களில் ஒன்று. ஹரியானாவின் கல்காவிலிருந்து சிம்லாவுக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரயில் பாதையில் 102 சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்தியாவில் அதிகமாக சுரங்கப் பாதை இருப்பது இங்கு தான். மேலும் 912 வளைவுகள், 969 பாலங்கள் உள்ளன. சராசரி வேகம் மணிக்கு 25 - 30 கி.மீ., ஆங்கிலேயர் ஆட்சியில் கோடைக்கால தலைநகராக சிம்லா இருந்ததால், இந்நகருக்கு ரயில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.