சின்ன சின்ன டிப்ஸ்!
1. அப்பளம் பொரிப்பதற்கு முன்னால், வெள்ளை துணியால் துடைத்து விட்டு பொரித்தால் எண்ணெய் கலங்காது; அப்பளமும் சிவக்காது.2. எண்ணெய் உள்ள பாத்திரத்தில் சிறிதுமிளகை போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாது.3. எண்ணெயில் செய்த இனிப்பு, கார வகைகளை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது உப்பை ஒரு துணியில் கட்டி போட்டு வைத்தால் நெடி வராது.4.வெண்டைக்காயை வதக்கும்போது சிறிது எலுமிச்சைச்சாறு விட்டால், பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்.5.தோசை மாவு அரைக்கும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்தால் தோசை நன்றாக இருக்கும்.6.காலிபிளவரை வேக வைக்கும்போது சிறிது பால் சேர்த்து கொதிக்கவிடுங்கள். பூக்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கு அகன்று, மேலாக கசடாக வந்துவிடும். அதை அகற்றுவது எளிது.7.வெங்காயத்தை வதக்கி, வெல்லம் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்; பித்தக் கோளாறும் போகும்.