உள்ளூர் செய்திகள்

இலையா... இல்லையா...?

தட்டையான, அகலமான இலைகளில் இருந்து இவை மிக வித்தியாசமாய் இருந்தாலும் பைன் மரத்தின் இந்த குச்சி இலைகள்தான் ஊசி இலைகள் என அழைக்கப்படுகின்றன. செயல்பாடுகளில் இவைகளுக்கும், மற்றைய இலைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஊசி இலைகளில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் தாவர திசு செல்களில் இருக்கும் நுண்ணிய பச்சை பொருட்கள் உண்டு. அதே போல சுவாசிக்கவும், நீராவியை வெளியேற்றவும் இலையில் நுண்ணிய ஓட்டைகள் உண்டு.இலையின் பண்புகளில் மற்ற இலைகள் ஒத்து இருந்தாலும், உருவ அமைப்பில் மிக வேறுபட்டது இந்த ஊசி இலைகள். உதாரணத்திற்கு, ஊசி இலையில் தண்ணீரையும், சத்துகளையும் எடுத்து செல்ல ஒரே ஒரு நாளம்தான் இருக்கிறது. ஆனால், பிற இலைகளில் குறிப்பாக தட்டையான இலைகளில் எண்ணற்ற நாளங்கள் உண்டு. ஊசி இலையின் மேல் தோல் கடினமானது. அதனால் இந்த இலையால், மிக உஷ்ண மானது முதல் மிக குளிரானது வரை எந்த சீதோஷ்ண நிலையையும் தாக்கு பிடிக்க முடியும். இதன் நீண்ட குறுகலான இலை வடிவம் முன்புறமிருந்து பார்த்து பின்புறத்தை யூகிக்க முடியாதபடி உள்ளது.

பைனின் ஊசி இணைப்புகள்!

பைனின் கிளைகள் நீண்ட மற்றும் குறைந்த நீளங்களுக்கு பிரிந்துள்ளது. குறைந்த நீள கிளைகளின் நுனியில் ஊசி இலைகள் அடுக்கு களாய் அல்லது திரள்காய் இரண்டு, மூன்று அல்லது ஐந்து என இருக்கும்.

கடின சீதோஷ்ண நிலையை தாங்கும்

நீண்ட மெல்லிய வடிவம், இவற்றிற்கு ஊசி இலை என பெயரை தருகிறது. இந்த மெல்லிய வடிவத்தின் மேல் கடினமான மெழுகு போன்ற மேல் தோல் இருந்து தாவரத்தின் நீர் நீராவி ஆகாமல் பாதுகாக்கிறது. இவை குளிரான மற்றும் பனியான சீதோஷ்ண நிலைகளை தாங்கும்.இந்த ஜப்பானிய கருப்பு பைன் மரம் என்றும் பசுமையும், நல்ல உயரமும் கொண்டு ஜப்பானிய மற்றும் தென் கொரிய பகுதிகளில் காணப்படுகிறது. இவைகளுக்கு கடினமான மற்றும் பழுப்பு நிற பட்டைகளும், ஊசி இலைகளும் இருக்கும். ஒரு திரளில் இரண்டு இலைகளிலிருந்து இலைகள் இருக்கும். அவை 10முதல் 15 சென்டிமீட்டர் நீளமும், 1 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட ஊசி இலைகளாக இருக்கும்.

பைன் ஊசியின் வடிவங்கள்!

பைன் ஊசியின் குறுக்கு வெட்டு தோற்றம் திரளில் உள்ள ஊசிகளின் எண்ணிக்கையை பொருத்து அமைகிறது. வெவ்வேறு குறுக்குவெட்டு தோற்றங்கள் வட்டமான (கீழ்-இடது), அரை வட்டமான (கீழ்-நடு) மற்றும் பேன்-வடிவமான (கீழ்-வலது) என உள்ளன.ஊசியின் தோலாக புறத்தோல் அடுக்கும், மேல் தோல் செல்களும் திகழ்கிறது. காற்று உட்புக அனுமதிக்கும் துவாரங்களாக நுண்ணிய ஓட்டைகள் உள்ளன. மெஸோபில் திசு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. மரபிசின் போன்ற நாளம், தண்ணீர் மற்றும் சத்துகளை எடுத்து செல்வதால் நாள அடுக்குகளில் ஏற்படும் பாதிப்பு களை நிவர்த்தி செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !