உள்ளூர் செய்திகள்

அகிம்சை மனம்!

பாரசீக பாதுஷா நவுஷேர்வான் வேட்டையில் பிரியமுள்ளவர். ஒரு நாள், வேட்டைக்குச் சென்றார். வழியில், ஒரு நாயை ஒருவன் கல்லால் அடித்தான்; அது கால் ஒடிந்து, நொண்டியபடி ஓடியது. அச்சமயம், அந்த பக்கமாக, வெகு வேகமாக ஓடி வந்த குதிரை, கல்லால் அடித்தவனை இடித்து தள்ளியது. அவன் கால் ஒடிந்து, நொண்ட ஆரம்பித்தான். வேகமாக ஓடிய குதிரை, ஒரு குழியில் விழுந்து காலொன்று ஒடிந்தது; அதுவும் நொண்ட ஆரம்பித்தது.இவற்றை கவனித்த நவுஷேர்வான், 'கடவுள் எப்படி உடனுக்குடனே தண்டிக்கிறார்' என்று எண்ணியபடி, வேட்டையாடுவதை நிறுத்தினார். அகிம்சையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்; யாருக்கும் துன்பம் தராமல் வாழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !