உள்ளூர் செய்திகள்

அய்யோடா... சாமி... இப்படியா...?

நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். சில பழமொழிகளை மட்டும், தவறுதலாக பயன்படுத்துகிறோம். அந்த பழமொழிகள் எவை என்பதை இங்கே பார்க்கலாமா?* 'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு' என்பதை பேச்சு வழக்கில் பலர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இது முற்றிலும் தவறு.'ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு' என்பதே சரி.* அடுத்து, 'படிச்சவன் பாட்டை கெடுத்தான்; எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.' 'படிச்சவன் பாட்டை கொடுத்தான்; எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்' என்பதுதான் சரி.* 'ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்' என்பதும் தவறு.'ஆயிரம் வேரை (மூலிகை வேர்) கொண்டவன் அரை வைத்தியன்' என்பதே சரி. (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்)* அடுத்து, 'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' இதுவும் தவறு.'நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு' என்பதே சரி.இதன் விளக்கம் என்ன தெரியுமா?சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.* 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பான் என்ற பழமொழியும் தவறு.'அர்பணித்து வாழ்ந்து வந்தால், அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்' என்பதே சரி.* 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்ற பழமொழியும் தவறு.இதன் சரியான பழமொழி என்ன தெரியுமா?'கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்; நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!' இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்க மாட்டீர்கள். இதில், நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகி விட்டது.ஹையோடா சாமி இதுதான் 'மேட்டரா?' என வியக்கிறீர்கள்தானே! இனிமேலாவது, பழமொழிகளை திருத்திச் சொல்வோமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !