அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! எல்லாமே களிமண்ல கீதுப்பா!பேச்சு வழக்கை, 'மொழி' என்றனர். அந்த மொழியை தொடர்ந்து எழுத்து உருவானது. இந்த எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.கி.மு.,4000ம் ஆண்டுகளிலேயே களி மண்ணை பேப்பர் போல பயன்படுத்தி அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்ட வணைகள் போன்றவை எழுதப்பட்டன.போகப் போக பேசுகிற மொழியை பிரித்து தனிப்படுத்தி, ஒவ்வோர் எழுத்துக்கும் தனி குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.காகிதம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் தகவல்களை அனுப்ப, ஈரக்களி மண்ணை பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன் ஈரக் களிமண்னை அதன் மீது வைத்து, 'பேக்கிங்' செய்து விடுவர். அது கீழே விழுந்து உடைந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும். அதை பெற்று கொண்டவர் லேசாக தட்டி உதிர்த்தால் போதும் உள்ளே உள்ள தகவலை படிக்கலாம்.ஆயிரக்கணக்கான குறியீடுகளை களிமண்ணில் எழுத கல்வியறிவு தேவைப்பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.அங்கு சட்டம், அரசியல், மருத்துவம் போன்ற விஷயங்கள் குறித்து தனித்தனி பயிற்சியும் அளிக்கப்பட்டது. எழுத்து என்பது இப்படி கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து முழு வடிவம் பெற, 800 ஆண்டுகள் ஆயின.மொழி மனிதனின் கைவசப்பட்டவுடன் அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது.கி.மு.,2000ல் பாபிலோனியர்கள் எழுதிய சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர்கள் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பழமொழிகளை கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடங்களாக இருந்திருக்க வேண்டும்.ஒரு களிமண் குறிப்பில், அழகு நிலையம் என்ற ஒன்று இருந்தால், அங்கு கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்ற பழமொழி கிடைத்து இருக்கிறது.இன்றளவும் பின்பற்றப்படும், 'வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது' என்ற பழமொழியும் கூட, களிமண் குறிப்பில் இருந்துபெற்றதுதான்.'உன் தலைல களிமண்ணா இருக்கு' என யாராவது திட்டி சொன்னால் இனிமே கவலைப்பட மாட்டீங்கதானே!வாட்! வாந்திக்கு 50 லாக்ஸா?இங்கிலாந்தின், 'லான்கேஷையர்' என்னும் நகரை சேர்ந்த தம்பதியர் கேரி,- ஏஞ்செலா வில்லியம்ஸ்.வழக்கமாக அங்குள்ள கடற்கரையில் பொழுதை செலவழிக்கும் இவர்களது முக்கிய பணி, திமிங்கிலம் வாந்தி எடுத்த பிறகு கரையில் ஒதுங்கும் கழிவில் ஏதாவது அதிசயமான பொருட்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதுதான்.அதாவது நடுங்கடலில் உள்ள திமிங்கிலங்கள் அரிதான மீன்களை உண்ட பின், சில மீன்கள் சரியாக செரிக்காமல், திமிங்கிலத்தின் குடல் பகுதியிலேயே தங்கிவிடும்.அவை ஒரு பெரிய பந்துபோல உருவாகி, நீண்ட நாட்களுக்கு பிறகு வாந்தியாக வெளியே வந்துவிடும். இதை, 'அம்பர்கிரிஸ்' என்று அழைக்கின்றனர்.வாசனை திரவியங்கள் தயாரிக்க இது முக்கியமாக தேவைப்படுவதால், இதன் மதிப்பும் சந்தையில் மிக அதிகமாக உள்ளது.இந்நிலையில் இத்தம்பதியர் இத்தகைய மெழுகுப் பந்து ஒன்றை கண்டுபிடித்தனர். 157 கிலோ எடை உள்ள இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய். மூன்று ஆண்டுகளுக்கு முன் இதை விட பெரிதான திமிங்கிலம் வாந்தி எடுத்த, இதை விட சற்று பெரிதான பொருளை, ஒன்றே கால் கோடி ரூபாய்க்கு விற்று இத்தம்பதியர் கோடீஸ்வரர் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.கால் பாதங்களில் தசை சுருக்கமா!கால் தசைகளில் சுருக்கம் என கவலை வேண்டாம். சிறிதளவு சர்க்கரையை எடுத்து எலுமிச்சை சாறுடன் கலந்து காலில் தேயுங்கள்.இயற்கையான 'ஸ்க்ரப்' இது.இதன் மூலம் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். அப்புறம் கிளிசரின் தடவி வாருங்கள். கால் தசைகள் சுருக்கமின்றி பொலிவாகும். இன்னொரு வழியும் கூட இருக்கிறது. இரண்டு பக்கெட்டுகளில் ஒன்றில் மிதமான வெந்நீரும், இன்னொன்றில் குளிர்ந்த நீரும் எடுத்து கொள்ளுங்கள். வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் காலை வைத்து விட்டு பின், குளிர்ந்த நீரில் இரண்டு நிமிடங்கள் வைத்திருங்கள்.மாற்றி மாற்றி பலமுறை இப்படி செய்யலாம். அந்த நீரில் கல் உப்பு சிறிது சேர்த்தால் கால்களுக்கு மிகவும் நல்லது.என்றென்றும் அன்புடன், அங்குராசு.