உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஒரு புத்தக பூவிற்காக குறிஞ்சி பூ ஆண்டுகள் தியாகம்!புத்தகங்கள் உருவாக்கும் தலைமுறைதான் உலகை மேம்படுத்தும். 'மைனராக இருந்த மானுடம், புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பிறகுதான் மேஜரானது.'ஜார்களின் ஆட்சியில், ஒரு ஏழைத் தொழிலாளி தும்முவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்ற துயரத்தை சொன்ன சிறுகதை, ஏற்படுத்திய கொந்தளிப்பு, ரஷ்ய புரட்சியின் முக்கியமான அம்சம். ஜனநாயக சர்வாதிகாரத்தை கிழித்தெறிந்து தொடர்ச்சியாக எழுதப்பட்ட எகிப்து இலக்கியங்கள், அங்கு நடந்த புரட்சிக்கான ஒரு விதை. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் கதைகள், தமிழ் நிலத்தில் பெரியார் முன்னெடுத்த சமூகப் புரட்சிக்கான இன்னொரு சுடர்.வாசிப்புதான் ஒரு வரலாற்றை உருவாக்கு கிறது; அரசியலை நிர்மாணிக்கிறது; கனவு களை கொண்டுவருகிறது; கோடானு கோடி கூட்டு புழுக்களை, பட்டாம்பூச்சிகளாக ஆக்குகிறது. நமது பெற்றோர் தலைமுறைக் கான வாசிப்பு, காமிக்ஸ்களில் இருந்தும், அம்புலிமாமாவில் இருந்தும்தான் தொடங்கியது.இரும்பு கை மாயாவி, டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், ஜேம்ஸ் பாண்ட், லக்கிலுக் என காமிக்ஸ் பாத்திரங்கள் தரும் கற்பனைகள் எவ்வளவு ரம்மியமானவை தெரியுமா?மெக்ஸிகோ நகரின் எல்லையோர கிராமத்து க்ளப்பில் நடக்கும் துப்பாக்கி சண்டைகள், நம் பெற்றோரின் மாணவ பருவத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்கின.குட்டிக் கிருஷ்ணன், முல்லா, தெனாலிராமன், பீர்பலுடன் செலவழித்த நம் பெற்றோரின் கோடை காலங்கள், இப்போதைய '௪G' தலைமுறையினருக்கு கிடைக்குமா தெரியவில்லை.ஆயிரமாயிரம் விழிகள், ஆயிரமாயிரம் காட்சிகள், ஆயிரமாயிரம் குரல்கள்... என வாசிப்பு தரும் தரிசனங்கள்தான் ஒவ்வொருவருக்குமான உலகை அழகாக்குகின்றன.ஒருபுத்தகத்துக்காக நீங்கள் எவ்வளவு அலைந்து இருப்பீர்கள்?ஜோனன் டிக்கன்ஸ் என்ற பிரெஞ்சுக்காரர் கிட்டத்தட்ட, 12 ஆண்டுகளாக, 16 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேலாக அலைந்து திரிந்து இருக்கிறார்.டிக்கன்ஸ் இவ்வளவு தேடி அலைந்தது, 102 ஆண்டுகளுக்கு முன் அச்சான, 'ப்ரோக்கன் தி ஹெல்' என்ற புத்தகத்தை தேடி.பிரெஞ்சு பழங்குடியினரிடம் தொடங்கிய முதல் கிளர்ச்சி பற்றிய, அந்த புத்தகத்தின் ஒரே ஒரு பிரதி எங்கோ இருப்பதாக அறிந்து, மனம் தளராமல் 12 ஆண்டுகள் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கண்டுபிடித்துவிட்டார்.ஒருவரிடம் அந்த பிரதியை கண்டுபிடித்து வாங்கியபோது, டிக்கன்ஸ் தனது வாழ்வின் ஒரு பகுதியை இழந்திருந்தார்.குடும்பம், சந்தோஷம், வயது, பணம் என எல்லாவற்றையும் தொலைத்திருந்தார்.ஆனால், அந்த பிரதியை வாங்கிய கணம், 'இந்த நிமிடம் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி, வரும் தலைமுறைகளுக்கு தந்து விட்டு, நான் மறைந்து விட்டால், அதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்' என்று நினைத்த டிக்கன்ஸ் அதை உடனே செய்தார்!ஒரே ஒரு புத்தகம்-என்ன ஆவல், ஆர்வம்!நீங்கள் உங்கள் பள்ளி புத்தகங்களை மார்க் வாங்க படிக்காதீர்கள். என்னென்ன விஷயங்கள் இருக்கு என ஆர்வத்துடன் ஆழ்ந்து படியுங்கள். அதில் எந்த விஷயம் உங்களை அதிகம் கவர்கிறது என பாருங்கள்.கதைகள், விஞ்ஞானம், விளையாட்டு, வரலாறு என எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்.அது சம்பந்தமான புத்தகங்களை பள்ளி நுாலகம், தமிழ்நாடு அரசின் நுாலகம், தனியார் நுாலகம் என தேடுங்கள்.பெற்றோரால் முடிந்தால் புதிய புத்தகங் களாக விலை கொடுத்து வாங்கலாம்; படிக்கலாம்; உங்கள் வீட்டிலேயே நூலகமாக படைக்கலாம்.ஒரு விஷயம், ஆழ்ந்து படிக்கும் போது பல விஷயங்கள் புலப்படும். அது உங்களின் படிக்கும் வேட்கையை அதிகப்படுத்தி அறிவாளியாக மாற்றும்.படிக்கும் ஆர்வத்திற்கான முதல் படியை எப்போதோ மிக சிறப்பான முறையில் நீங்கள் எடுத்துவிட்டீர்கள் என்பது எனக்கு தெரியுமே!எப்படி என்கிறீர்களா...உங்கள் வீட்டில்தான் தினமலரும் அதன் குட்டி பாப்பா மலரான, சிறுவர்மலர் இதழும் வருகிறதே!நிறைய நிறைய படியுங்கள்! மிக சந்தோஷமான உலகை படையுங்கள்!ஆல் இன் ஓன்!இனிப்பு நமக்கு பிடிக்கும்னா லட்டு, அல்வான்னு சாப்பிடலாம். புளிப்புன்னா மாங்கா சாப்பிடலாம். அதாவது, எதை சாப்பிட்டாலும் அதன் சுவையை இது இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்று நமக்கு நாக்கு உணர்த்திவிடும்.ஆனால், இந்த ஆறு சுவைகளும் ஒரே பொருளில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?ஆமாம்! நெல்லிக்காயில் மட்டுமே அறுசுவைகளும் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.நெல்லிக்கனியை எடுத்து கடித்தால் கசப்பதையும், துவர்ப்பதையும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அதில் சிறிது உப்புத்தன்மையும், புளிப்புத்தன்மையும் கார்ப்பு சுவையும் மறைந்துள்ளது.நெல்லியை சுவைத்துவிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பு சுவையை உணரலாம்.இப்படி அறுசுவையும் கலந்த இயற்கையின் அதிசய கனியாக விளங்குகிறது நெல்லிக்கனி. ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டா இளமையாக இருப்போம் தெரியுமா?ஆரோக்கிய ஐடியாக்கள் ஜி!என்ன ஜி! உடல்நல குறைவு வந்தபின் கீரை, மூலிகைன்னு செடி கொடிகளை - காடு மலைகளை தேடி ஓடாம இப்பலேர்ந்தே கொஞ்ச கொஞ்சமா கடைப்பிடிக்கலாமே ஜி!கீரை சாப்பிடுங்க!இது எல்லாரும் சொல்றதுதான். ஆனால், ஒரே கீரையை அடிக்கடி பயன்படுத்தாமல் ஒருநாள் அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை என மாற்றி மாற்றி சமையலில் பயன்படுத்தினால், குழந்தைகளும் சலித்து கொள்ளாது சாப்பிடுவர். எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.இளசே நல்லது! காய்கறிகளில் நன்கு விளைந்த வாழைக்காய், கத்தரிக்காய் என சாப்பிடுவதை விட பிஞ்சு வாழை, பிஞ்சு கத்தரி, பிஞ்சு புடலை, பிஞ்சு கொத்தவரை, வெள்ளரிப் பிஞ்சு என இளம் காய்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மருத்துவ குணம் நிறைந்தது. நோயெதிர்ப்பு சக்தி தரும் சூப்!சித்தரத்தை, அதிமதுரம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், வல்லாரை போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் ஹெர்பல் சூப், சூடாக பருகும் போது ரொம்ப காரசாரமாக இருக்கும்.சளி, ஆஸ்துமா, இருமல், சாதாரண காய்ச்சல் குணமாவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.அவங்கமட்டுமா நிறம் மாறுவாங்க!மனுஷங்க டைமுக்கு டைம் குணம் மாறினா அவங்கள பச்சோந்திம்பாங்க!ஓணான் இனத்தை சேர்ந்த பச்சோந்தி மட்டுமின்றி சலினர் என்ற பட்டாம்பூச்சியும், கடற்குதிரையும் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றபடி தமது நிறத்தை மாற்றி கொள்ளும் இயல்புடையவை.சில மீன் இனங்களும், ஆக்டோபஸ்ஸும் கூட அரிதாக நிறம் மாறுகின்றன். அவை நிறம் மாறுவது தற்காப்பிற்காக!ஆனால், மனிதன் மட்டும் நிறம் (நல்ல குணம்) மாறக்கூடாது! சரிதானே பிரண்ட்ஸ்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !