வாழை இலை ரசம்!
தேவையான பொருட்கள்:சிறிய வாழை இலை - 1காய்ந்த மிளகாய் - 2தக்காளி - 1சீரகம், மிளகு - தலா 1 தேக்கரண்டிபுளி, எண்ணெய், பூண்டு, மஞ்சள் துாள், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவுமல்லிஇலை, கடுகு, பெருங்காயம், வெந்தயம் - சிறிதளவு.செய்முறை:இளம் வாழை இலை, பூண்டு, மிளகு, சீரகம், தக்காளியை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.இந்த கலவையில் புளி கரைசல், உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து லேசாக கொதிக்க விடவும்; பின், மல்லிஇலை சேர்த்து இறக்கவும். சுவை மிக்க, 'வாழை இலை ரசம்!' தயார். சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் போன்று தனியாகவும் பருகலாம். - இ.இசைமொழி, புதுச்சேரி.தொடர்புக்கு: 85084 47747