உள்ளூர் செய்திகள்

வாழவைக்கும் வாழை!

வாழை, முக்கனிகளில் ஒன்று. உலகில், மர வகை தாவர வரிசையில் முதலில் தோன்றியது. செவ்வாழை, மொந்தன், பேயன், பச்சைநாடன், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி என, பல ரகங்கள் உள்ளன.வாழைப் பழத்தில்...* ஐந்து வகை வைட்டமின் சத்துக்கள்* கார்போஹைட்ரேட்* பாஸ்பரஸ்* பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.ஒரு வாழை மரம் வைத்தால், பக்கத்தில் கன்றுகள் தோன்றும். அதனால் தான், சுப காரியங்களில் வீட்டு வாசலில் வாழையால் அலங்கரிப்பர்.வாழை இலை, பூ, காய், தண்டு, பழம் என, அனைத்தும் உணவுப் பொருளாகின்றன. வாழைப்பூ, சக்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புண் வராமலும் தடுக்கிறது. வாழைத் தண்டு, சிறுநீர்ப்பையில் தங்கும் கற்களை கரைக்கிறது; பித்த நீரை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலையும் போக்குகிறது. உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை தருகிறது வாழைப்பழம்.வாழை இலையில் உணவு உண்டால் நோய் தடுப்பு ஆற்றல் பெருகும்; நரை முடி தோன்றாது; பார்வை பாதிப்பு ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !